
நான் கனவுகள்
விதைத்த இடம்.
என் நினைவுகள்
புதைத்த இடம்.
உன் விழி பார்வைக்கு
ஏங்கியே
நான்கு வருடங்கள்
கழித்த பூங்காவனம்.
புத்தகம் நடுவில்
கவிதைகள் ஒளித்த
அந்த தினங்களை
மறக்காது மனம்.
சேர்வோம் என்ற
நம்பிக்கையில் சேர்த்தே
எழுதினேன் உன் பெயரை
என் பெயரோடு.
நீ யாருக்கோ என்று
ஆகிவிட்டபின்பும்
இன்னும் இருக்கிறேன்,
நான் உயிரோடு.
உனது விடுதி
அருகே நூலகம்.
அங்கே
நான் படிக்க
வந்ததை விட
உன்னை பார்க்க
வந்தது தான் அதிகம்.
உன் கால்கள்
நடந்து வரும்
அழகை காண,
கல்லூரி சுவரில்
காத்திருப்பேனே!
பாவம் ஏமாந்து
போய் இருக்கும்
என்னோடு உன்னை
சேர்ந்து ரசித்த
அந்த சுவர்கள்.
மரங்களில் உன்
பெயரை செதுக்கிய
உலிகல் எனது
பேனா முட்கள்.
பாவம் அவை !
உன் பெயரை
எழுதிய பாவத்தை
தவிர வேறொன்றும்
செய்யவில்லை
கல்லூரி அது ஒரு
மாய கண்ணாடி.
எப்போதும்
பசுமையாய்
நெஞ்சில்
No comments:
Post a Comment