Thursday, July 06, 2006

மரணம்




வாழ்க்கை என்று முடியுமோ

என்று நினைக்கும்

ஒவ்வொரு நொடியும் மரணம்.

வாழ்வையே அனுபவித்து வாழ்ந்தால்

ஏது மரணம் பற்றி ஒரு மனம்.

உலகில் மரணம் வென்ற

ஒரே உயிர் மரணம் தான்.

மரணத்திற்கு பின்

ற்படும் புது ஜனனம்.

மரணம் கூட உயர்ந்தது தான்!

நான் பிறந்த மடியிலேயே

அது நிகழ்வது ஆனால். .

அகதி


விடியளுக்காக

காத்திருந்து

அஸ்தமனம்

ஆகும் சூரியன்

நாங்கள்

கல்லூரி
















நான் கனவுகள்
விதைத்த இடம்.
என் நினைவுகள்
புதைத்த இடம்.

உன் விழி பார்வைக்கு
ஏங்கியே
நான்கு வருடங்கள்
கழித்த பூங்காவனம்.

புத்தகம் நடுவில்
கவிதைகள் ஒளித்த
அந்த தினங்களை
மறக்காது மனம்.

சேர்வோம் என்ற
நம்பிக்கையில் சேர்த்தே
எழுதினேன் உன் பெயரை
என் பெயரோடு.

நீ யாருக்கோ என்று
ஆகிவிட்டபின்பும்
இன்னும் இருக்கிறேன்,
நான் உயிரோடு.

உனது விடுதி
அருகே நூலகம்.
அங்கே
நான் படிக்க
வந்ததை விட
உன்னை பார்க்க
வந்தது தான் அதிகம்.

உன் கால்கள்
நடந்து வரும்
அழகை காண,
கல்லூரி சுவரில்
காத்திருப்பேனே!

பாவம் ஏமாந்து
போய் இருக்கும்
என்னோடு உன்னை
சேர்ந்து ரசித்த
அந்த சுவர்கள்.

மரங்களில் உன்
பெயரை செதுக்கிய
உலிகல் எனது
பேனா முட்கள்.

பாவம் அவை !
உன் பெயரை
எழுதிய பாவத்தை
தவிர வேறொன்றும்
செய்யவில்லை

கல்லூரி அது ஒரு
மாய கண்ணாடி.
எப்போதும்
பசுமையாய்
நெஞ்சில்

Wednesday, May 31, 2006

நூலகம்


நூலகத்தில்

"அமைதி காக்க".

மதிக்காமல்

பேசி கொண்டே

இருக்கும் உன்

கொலுஸுகள்.

Saturday, May 20, 2006

மௌனம்













வார்த்தைகளுக்கே
அர்த்தம் புரியாதவன்,

மௌனங்க்கலை கூட
புரிந்து கொள்கிறேன்.

மௌனம் உனது
தாய்மொழி என்பதால்

பார்வை
















உன் கடை விழி பார்வைக்கே

கரைந்து விடுவேன் நான்.

நீ நேர் நின்று

பார்த்தால் என்ன ஆவேன்?