Friday, November 06, 2009

பரம்பரைத் தொழில்


நேரு பிரதமராக இருக்கும்போது,
என் தாத்தா செருப்புத்
தைத்த்துக் கொண்டிருந்தார்.
இந்திரா பிரதமராக இருக்கும்போது
என் அப்பா செருப்புத்
தைத்துக் கொண்டிருந்தார்.
ராஜீவ் பிரதமராக இருக்கும்போது
நான் செருப்புத் தைத்துக்
கொண்டிருந்தேன்.

இறுதிவரைத் தொடர்ந்துக்
கொண்டே இருக்கிறது.
அவர்கள் பிரதமராவதும்,
நாங்கள் செருப்புத் தைப்பதும்.

2 comments:

Theepachelvan said...

அன்பிற்குரிய உதயமுமார்

உங்கள் இந்தக் கவிதை மிகவும் நன்றாக வந்திருக்கிறது. என்னை பாதிக்கிறது. நன்றி

மிக்க அன்புடன் தீபச்செல்வன்

Sent Bobby said...

Master piece da.... no other words to say...