Monday, June 09, 2008

அம்மா

"அம்மா"
பிறக்கின்ற உயிர்கள்
யாவும் பிரிவினை
இன்றி கூறும்
பெயரே.

இருளாய் இருந்த
கருவுக்குள்
உயிர் தந்து
உருவாய் மாற்றியது
நீ தான்.

உலவும் இந்த
உடலுக்குள்
உருலுவது
உன் உதிரம்
தான்.



பசியெடுத்து அழும்
மழலை பருவாங்களில்
பசியாற்றும் தெய்வ
திருமுகமாய் அம்மா

சிறுவயதில்
அம்மாவின் கைகளில்
இருந்து மண்ணில்
எம்பி குதிக்க
முயலும் போது
பிரபஞ்சமே
தோற்றுவிட்ட ஓர்
பிரமிப்பு.

நிலா என்னும்
முதல் காதல்
நங்கையை அழைத்து,
அம்மா பாடும்
பாடல்களில் ஆயிரம்
இசையின் அற்புத
சங்கமம்.

மன்னெடுத்து உண்ணும்
மயக்க பொழுதுகளில்
வாயை திறக்க
சொல்லும் தாயின்
கட்டளையில் ஈர்ப்பு.

என்னை உண்ண
வைத்து பசி
ஆருவதில் உனக்கு
என்னதான் ஆனந்தமோ!

இமை மூட
தாய் இசைக்கும்
தாலாட்டுகளில்
இதயமே உறங்குகின்ற
ஈரத்தின் சாயல்.

பள்ளி செல்லும்
முதல் நாளில்
உயிரில்லா தெய்வங்களை
வணங்க சொல்லும்
உயிருள்ள தெய்வத்தின்
எதிர்பார்ப்பு.

நடை பழகும்
நாட்களில்
என் கரம்
பிடித்து நீ
காட்டிய பாதை.
அதில் தான்
இன்னும் நடந்து
கொண்டு இருக்கிறேன்.

நீ கைப்பிடித்து
”அ” எழுத
கற்று கொடுத்த
காலங்கள்.
நினைத்து பார்த்தால்
விழியில் நீர்
கோலங்கள்.




நான் ஊருக்கு
வரும்போது
நீ தரும்
உபசரிப்பு சொல்லும்
ஒரு தாயின்
தவிப்பை.

தனியான இருட்டறையில்
உன்னை நினைத்து
அழுகையில் கனவில்
வந்து கண்ணீர்
துடைக்கும்
அன்பு கைகள்.

நோயால் நான்
விழுந்தால்
நோன்பு இருக்கும்
தெய்வம் நீ.

”அம்மா” இந்த
பெயரை உச்சரிக்கும்
போதே அலைபாயும்
மனம் அமைதி
ஆகிறது.

இன்னொரு பிறவி
இருந்தால்
உன் இன் மடியில்
தவழும்
வரம் வேண்டும்.

4 comments:

Anonymous said...

மிகவும் அருமை
உங்கள் வரிகள் கண்ணில் நீர் வர வைக்கிறது

உதயகுமார் said...

உங்கள் கருத்திற்கு நன்றி.எல்லோர் மனதிலும் தாயே முதல் தெய்வமாக விலங்குகிறார்.எனக்கும் அப்படி தான்

Anonymous said...

அம்மாவை பற்றி அருமை. No Chance.....

உதயகுமார் said...

I need your support to encourage me to write more