Monday, June 09, 2008

உயிர் தோழி

ஏதோ ஒரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
நானும் என்
உயிர் தோழியும்.

கணவன் அருகே
கையில் ஒன்றும்
கணவனிடம் ஒன்றுமாய்
மழலை பூக்கள்.

கொஞ்ச நேர மென
கணவன் காது
கடித்து கண்முன்
உதிக்கிறாள்
உயிர் தோழி.

”வகுப்பறை வாசல்
மரத்தடி நிழல்
நூலக பாதை
பக்க சுவர்
திரையரங்கு காட்சி
பேருந்து பயணம்
நண்பர் வீடுகள்
கல்லூரி சாலைகள்
தேர்வு கூடம்
பேருந்து நிறுத்தம்”

என பழைய
நினைவுகளில்
பாதி நேரம்
பார்த்து கொண்டே
கழிய,

ஊமையாய் நிற்கிறாள்
உயிரில் வாழும்
உன்னத தோழி.

”எப்படி இருக்கே”
என நான் கேட்டு
முடிப்பதற்குள்

”நேரமாச்சு” என
கணவன் குரல்
வந்த திசை
நோக்கி எதுவும்
சொல்லாமலே
நகர்கிறாள்



என் வினாவின்
விடை அவள்
போகும் பாதையில்
புல படுகிறது.

”நலமாய் இருக்கிறாள்”
அவள் என்று.

கண்கள் நீரை
நிறுத்தி விட்டு
உதடுகள் பூக்க
தொடங்குகின்றன.

ஏதோவொரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
மீண்டும் சந்திப்போம்
என்ற நம்பிக்கையோடு.

3 comments:

Anonymous said...

நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்பே சொல்கிறது உங்கள் கவிதை.

அம்மு said...

Very nice. Lines are realistic.

உதயகுமார் said...

Thanks Suji and Ramesh.Actually it was written in my college days(4 years ago).But it is true now