Thursday, August 21, 2008

தடுமாற்றம்

உன் விரல்களைதானே
கண்டேன்!

பிறகேன் உன்
விழிகளை கண்டதுபோல்
இப்படி ஒரு தடுமாற்றம்
எனக்கு.

இதய கோவில்

என் இதயமும்
கோவில்தான்.

நீ வசிப்பதால்

நினைவும் கனவும்

என் கடைசி கனவு
ஞாபகம் இல்லை.
ஆனால் என்முதல்
நினைவு நீதான்.

புரிந்துகொள்

ஒருநாள் என்கவிதைகள்
உன்னை வந்து சேராவிட்டால்,
உன்னை மறந்துவிட்டேன்
என நினைத்துவிடாதே!

இறந்து போயிருப்பேன்
என புரிந்துகொள்.

பூக்களும் பேசும்

காகிதம் ஒன்றை கவிதை
ஆக்கி போனவளே!

இமைக்குள் நுழைந்து
இதயமாக ஆனவளே!

உன்மீது நான்கொண்ட
நேசம் பூக்களுக்கு
வாயிருந்தால் பேசும்

நீ மட்டும் போதும்

உன் நிழ்ல் போதும்
நான் கவலைகள் தொலைத்து.
கண்மூடி தூங்க.

உன் புன்னகை போதும்.
நான் இலையுதிர் காலத்திலும்
துளிர்த்து இருக்க.

நீ மட்டும் போதும்.
நான் நானாய் வாழ.

நீ மட்டும் போதும்

உன் நிழ்ல் போதும்
நான் கவலைகள் தொலைத்து.
கண்மூடி தூங்க.

உன் புன்னகை போதும்.
நான் இலையுதிர் காலத்திலும்
துளிர்த்து இருக்க.

நீ மட்டும் போதும்.
நான் நானாய் வாழ.

தாயும் நீயும்

ஒரேயொரு முத்தத்தில்
புரிந்துவிடும் தாயின்
பாசம்போல தான்
உன் நேசமும்.

ஒரேயொரு பார்வையில்
புரிந்துகொள்கிறேன்.

ஒத்திகை

ஒரேயொரு முறை
நீயென்னை பார்க்கும்
அந்த பார்வைக்காக
ஒராயிரம் முறை
எனக்குள் ஒத்திகை
பார்க்கிறேன்.

பார்த்தும் பாராமல்
நீ போகும் தருணங்களில்
கண்ணில் வியர்க்கிறேன்.

நினைவின் விதை

உனது நினைவின்
ஈரங்களில் விதையாக
நான் முளைத்தேன்.

உன் விழியிடும்
நாடங்களை நெஞ்சோடு
நான் களித்தேன்

குளிரும் சூரியன்

சுடும் சூரியனை
சுடுகின்ற பார்வை
உனதடி.
ஆனால் நீதொடும்
பார்வையில் குளிர்கிறேன்
நானடி.

நீ முடிவிலி.
போதும் உயிர்வலி.

தூக்கத்திலும் கவிதை

கண்கள் தூக்கம்
தழுவினாலும்
நெஞ்சம் கவிதை
தேடும்.

உன் நினைவுகள்
மட்டும்தானே
என்னை உயிராய்
மூடும்

உன்னை யாசிக்கிறேன்

கண்ணாடியில் விழும்
உன் பிம்பத்தைகூட
நேசிக்கிறேன்.

வாய்திறந்து நீ
பேசாத மெளனங்களை
கூட வாசிக்கிறேன்.

ஒவ்வொரு நொடியும்
உன்னையே உயிரென
சுவாசிக்கிறேன்.

தேய்பிறை இல்லாத
நிலவே உன்னை
மட்டுமே யாசிக்கிறேன்.

எனக்காக என்ன இருக்கிறது?

நீ விளையாட புல்வெளி.
நீ பயில கவிதைகள்.
நீ துயில தாய்மடி.
நீ சாய தந்தைதோள்.


என உனக்காக
எல்லாமே இருக்கிறது.

உன்னையும் உன்
நினைவுகளையும் தவிர.

கவிதை சுமக்கும் காற்று

எழுத்துமின்றி ஏடுமின்றி
கவிதை எழுதுகிறேன்
காற்றில்.

அதை தூக்கிச்செல்ல
முடியாமல் காற்று
கண்ணீர் விடுகிறது.
மேகத்தின் வழியாக.

காதலின் வடு

மனதின் வடுக்களில்
இன்னும் கசிகிறது
உதிரம்.

வலியை சொல்லி
அழமறுக்கிறது
அதரம்.

சோகத்தை மறைத்து
வைத்தாலும் காட்டி
கொடுத்து விடும்
கண்ணீர் விழிகள்.

ஏனடி மெளனம்

சில நேரங்களில்
மெளனம் என்பது
மன்னிப்பு.
சில நேரங்களில்
மெளனம் என்பது
தண்டனை.

நீ மன்னிக்கவோ
தண்டிக்கவோ நான்
தவறு ஏதும்
புரியவில்லை.

பிறகு ஏனடி
இந்த மெளனம்?

உன்னோடு வாழ்வேன்

வாழவேண்டும் உன்னோடு.
இல்லையேல்

புதைய வேண்டும்
மண்ணோடு.

நானும் மழையும்

வானில் இருந்து
மண்ணில் விழுந்ததும்,

மழைதுளி தன்னை
தொலைக்கிறது.

அதுபோலதான் நானும்
உனக்குல் விழுந்து
என்னை தொலைக்கிறேன்.

நானும் அலையும்

அலைகளும் நானும்
ஒரேயினம்.

கரையிடம் காதலை
சொல்ல முயன்று
தோற்று போவதில்.