Friday, May 30, 2008

உதிர்ந்த காதல்

இலக்கணம் தேடி
உனக்காக இயற்றிய
கவிதைகள்
அழுகையில் நனைந்து
அழுகி போனது.

நான் உறங்கினால்
உறங்கி விடுமா
உன் நினைவுகளும்
நம் காதலும்.

நீ
பேசி போன
பார்வைகள்,
வீசி போன
புன்னகை
அனைத்தும் சேமித்து
நரகத்திற்கு
அஞ்சல் அனுப்ப
துடிக்கிறது
மனம்.

இப்போதெல்லாம்
சாத்தான்கள் கூட
அழகாய் தான்
இருக்கின்றன!
பெண் வடிவில்.

குழந்தை போலவே
சிணுங்குவாயே!
அந்த சிணுங்கலில்
தான் சிக்கி
சிதைந்தடி
காதல்.

என் தாய் அழைத்து
போகாத கோவிலுக்கு
கூட நீ
குணமாக வேண்டி
சென்றேனே.
நீ பிழைத்து
கொண்டாய்
பாவம்
காதல் தான்
செத்து விட்டது.

உன் நிழலில்
இளைப்பாரிய
குற்றத்திற்கா
இன்று நிஜத்தால்
சுடுகிறாய்?

கோபிக்க கூட
தெரியாதாவன்
நான்?
என்னை போய் பிரிவால்
சபிக்க எப்படி
மனம் வந்தது
உனக்கு?

தாய்மையின்
சேய்மையை
தந்த நீதான்
இன்று சாவின்
தனலையும்
மூட்டுகிறாய்.

மலரென எண்ணி
முகர்ந்து பார்க்கையில்
முட்களை நீட்டுகிறாய்.

ஒரே ஒரு
முறை நானாய்
இருந்து பாரடி.
என் காதலின்
வலி உனக்கு
புரியும்

4 comments:

Anonymous said...

அருமையிலும் அருமை உங்கள் வரிகள் அனைத்தும்...
ஒவ்வொரு வரிகளிலும் உங்களது உணர்வுகள் தெரிகிறது

உதயகுமார் said...

நேசித்தலை விட , நேசிக்க படுதல் புனிதம்.இதை பலர் உணர்வது இல்லை

உதயகுமார் said...
This comment has been removed by the author.
Anonymous said...

really very nice lines uday.....