
உன் அருகில் இருக்கையில்
இதயம் தூரம் ஆனதடி.
நான் தொலைவில் துடிக்கையில்
அது அருகே வந்ததடி.
உன்முகம் கண்ட நாள்களில்
அகம் மட்டும் தனியாய் மகிழும்.
உன்னகம் கண்ட இந்நாளில்
என்நகம் சுகமாய் தவழும்.
தூரத்தில் நீ இருந்தாலோ
தொலைபேசி உன்னை அழைக்கும்.
அருகில் நீ வந்தாலோ
வார்த்தைகளும் வர மறுக்கும்.
மங்கை மொழி மழலையடி.
காலமெல்லாம் கேட்கும்
வரம் கிடைக்காதா?
நங்கை விழி நாகமடி.
நாளெல்லாம் உயிரை குடிக்காதா?
மண்ணில் என்னைப் புதைத்தால்
மாறிவருவேன் உன் உருவில்.
உன் மனதில் என்னை
புதைத்தால் மீண்டும் வரக்கூடுமோ.
நான் சிறகுதிர்ந்த பறவை.
நீயொ சிரிக்கின்ற வானம்.
உன்னில் பறக்க முடியாதோ.
உன்மனமும் ஒருநாள் விடியாதோ.
4 comments:
Supera irukku Uday neraya ezhudhunga brother :)
நன்றி ஸ்ரீ.மனதில் காதல் உள்ளவரை கவிதைகளும் தொடரும்
Nalla iruku Uday
Thanks Kavipiriyai. உங்கள் உண்மையான பெயர் என்ன?
Post a Comment